உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசை

காஞ்சியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று விமரிசையாக நடந்தது.சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, 18 அடி உயர பக்த ஆஞ்சநேயர், தேரடி  ஆஞ்சநேயர், டி.கே.நம்பி தெரு, ராம ஹரி பஜனை கோவில், திருவள்ளுவர் தெரு ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. வெற்றிலை மாலை, வடை  மாலை சாற்றப்பட்டது.ஓரிக்கை, முல்லை நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், திருமஞ்சனத்திற்கு பின், வடை மாலை அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா வந்தார்.உக்கம் பெரும்பாக்கம், 27  நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், மூல நட்சத்திர அதிதேவதையான நிருதி பகவானுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மலர் அலங்காரமும் நடந்தது.முத்தியால்பேட்டை பிரசன்ன  ஆஞ்சநேயர் சந்தனக் காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காட்டாங்கொளத்துார் ராமபக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில், 1,008 வடை மாலை சிறப்பு அலங்காரம்  நடந்தது.மாமல்லபுரம்மாமல்லபுரம், பக்த ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மூலவர், ஐந்து முகங்களுடன்; உற்சவர், 10 கைகளுடன், அலங்கரித்து, திருமஞ்சன  வழிபாடு நடந்தது.மாலை, உற்சவர் வீதியுலா வந்தார்.கோவிந்தவாடிகாஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி ஆஞ்சநேயர் கோவிலில், யாக சாலை பூஜை மற்றும் ஹோமம் சிறப்பு அபிஷேகம்  நடந்தது.திருப்போரூர்கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் திருமலை கோவிலான வீர ஆஞ்சநேயர் கோவிலில், விசேஷ திருமஞ்சனத்திற்கு பின், வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு ஏகதின லட்சார்ச்சனை  நடந்தது.இதேபோல் சிறுதாவூர், செங்காடு, மயிலை உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடை மாலை சாற்றுதல், தீப, துாப ஆராதனை நடந்தது.திருக்கழுக்குன்றம்திருக்கழுக்குன்றம் அடுத்த  ஒரகடம், புராதன ஆஞ்சநேயர் கோவிலில், திருமஞ்சனத்திற்கு பின், விசேஷ மலர் அலங்காரம் நடந்தது. அதேபோல், திருக்கழுக்குன்றம் தென் மாடவீதி, கொத்திமங்கலம், சூராடிமங்கலம்  ஆஞ்சநேயர் கோவில்களிலும், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.செங்கல்பட்டுசெங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், கோட்டைவாயில் வீரஆஞ்சநேயர் கோவில், ஹந்து சமய  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஆண்டு, அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு, வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகமும், மாலை, 6:00  மணிக்கு, சுவாமி, வெண்ணை காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். செங்கல்பட்டு நகரை சுற்றி உள்ள, கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !