உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணரின், 79வது குருபூஜை விழா

பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணரின், 79வது குருபூஜை விழா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின், 79வது குருபூஜை விழா நேற்று (ஜன., 6ல்) நடந்தது.

பஜனை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. வாரணாசி ராமகிருஷ்ணா சேவா சங்கத்தின் தலைவர் சுவாமி சர்வரூபானந்தர் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்ட பல்கலை முன்னாள் பதிவாளர் கோதனகாந்தி கலை, கல்வி பொருட்காட்சி யை திறந்து வைத்து பேசுகையில், மாணவர்கள் நேர்மை, ஆளுமை, தன்னம் பிக்கையுடன் செயல்பட வேண்டும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எளிமையாக வாழ வேண்டும். வாழ்வில் ஒரு இலக்கு நிர்ணயித்து, அதைநோக்கி பயணிக்க வேண்டும், என்றார்.

குருபூஜையையொட்டி நடந்த இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் நடந்த அன்னதான நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.மதியம் நடந்த பொதுக்கூட்டத்தில் சுவாமி சர்வரூபானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். இராமலிங்கம் அஸோசியேட்ஸ் தலைவர் ராமலிங்கம், அனைத்தும் உனக்குள் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழி வாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !