உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலத்தில் கிரிவல யாத்திரை துவக்கம்

மயிலத்தில் கிரிவல யாத்திரை துவக்கம்

மயிலம்:  ஆதீனம் சிவஞானபாலயசுவாமிகள், தமிழ்நாடு முருகபக்தர்கள் பேரவை அறக் கட்டளை கோவை கெளமார மடாலயம் குமரகுருபரசுவாமிகள், செங்கோல்ஆதீனம் சிவபிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சதர்ய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரிஆதீனம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள் அருளாசி ஆற்றி 1008 மலர் காவடிதிருவிழாவையும் கிரிவல யாத்திரையை துவக்கி வைத்தனர்.

அரோகரா கோஷம்: யானை, குதிரை, மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் கிரிவலம் வந்து கோயிலை அடைந்தனர். 12:45 மணிக்கு சுவாமிக்கு மலர் சொரிதல் அபிஷேகம் நடந்தது.

இதன் பின் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்கள் முருகனுக்கு ஆரோகரா கோஷமிட்டு வணங்கினர். திருச்செந்தூர் ஆண்டவர் அன்னதானம் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாத்தூர்,சிவகாசி, வெம்பக்கோட்டை, கோவில்பட்டி, சங்கரன் கோவில், ராஜபாளையம், திருத்தங்கல், ஸ்ரீவில்லிப்புத்தூர்,விருதுநகர், திருவண்ணாமலை, பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தொழில்அதிபர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !