சிவகங்கையில் பிப்.22ல் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
சிவகங்கை:பழமையான திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்ம் பிப்., 22ல் நடக்கிறது. இதற்கான திருப்பணிகள் நடக்கின்றன.
திருமலையில் 8 ம் நூற்றாண்டில் முற்கால பண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் சிவன், மீனாட்சி திருமணக் கோலத்தில் உள்ளனர். இக்கோயிலுக்கு வெளியே 13 ம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்களால் கோபுரம் எழுப்பப்பட்டது.
அதில் பாகம்பிரியான் அம்மனுடன் மலைக்கொழுந்தீஸ்வரர் லிங்க வடிமாக காட்சியளிக் கிறார். முக்குருணி விநாயகர், சுப்பரமணியர், காலபைரவர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.
மேலும் கோயிலை சுற்றி 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் விநாயகர் உருவம் பொறித்த கல் நீருக்குள் கிடக்கிறது.
கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். பழமையான இக்கோயில் கும்பாபி ஷேகம் 2006 ல் நடந்தது. 12 ஆண்டுகள் கழித்து பிப்., 22 ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற் காக சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் கிராமமக்கள் சார்பில் திருப்பணிகள் நடக்கின்றன.