திருக்கோஷ்டியூரில் ஹயக்ரீவர் ஹோமம்
ADDED :2485 days ago
திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம் நடந்தது. நேற்று (ஜன., 6ல்) காலை 9:00 மணிக்கு சுதர்சன, ஹயக்ரிவர் ஹோமம் துவங்கியது.
காலை 12:00 மணிக்கு பூர்ணாகுதி, மாணவர்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை நடந்தன. ஹோம த்தில் பூஜித்த எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் ஆசி வழங்கினார்.
பிராமணர் சங்க மாவட்டத் தலைவர் ராஜப்பா, பொதுச் செயலாளர் வைத்தியநாதன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் குருவாயூர்கண்ணன், மகளிர் அணி அமைப்பாளர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.