உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்: ஏப்ரல் 8ல் ஈஸ்டர் பண்டிகை!

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம்: ஏப்ரல் 8ல் ஈஸ்டர் பண்டிகை!

உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி நடக்கும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று துவங்கி 40 நாட்கள் நடக்கிறது. இயேசு கல்வாரி மலையில் கொலை செய்யப்படுவதற்கு முன் 40 நாட்கள் நோன்பிருந்தார்.இதை நினைவு கூரும் விதமாக இறைவனின் காலமாக மனம் மாற்றமடைய இயேசுவின் பாடுகளோடு நெருக்கமாக ஒன்றித்திட ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தில் முதல் நாள் விபூதி புதனாக ஆண்டுதோறும் கடைபிடிக்கின்றனர்.தவக்காலம் துவங்கும் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கின்ற திருப்பலியின்போது பங்கு தந்தையர்கள் மக்களின் நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கும் நிகழ்ச்சியே தவக்காலம் துவங்குவதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.கடந்த ஆண்டு குருத்தோலை பவனியன்போது பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்ட ஓலைகளை எரித்து இந்த சாம்பல் தயார் செய்யப்படும்.தவக்காலத்தில் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.புனித வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் தோறும் குருத்தோலைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.இந்த குருத்தோலைகளை மக்கள் கையில் ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி தெருக்கள் தோறும் வலம் வருவார்கள்.இதை தொடர்ந்து ஆலயங்களில் திருப்பலி சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. இன்று துவங்கும் விபூதி புதனையொட்டி கோட்டார் தூய சவேரியார் ஆலயத்தில் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் விபூதியுடன் திருப்பலி நிறைவேற்றி பக்தர்களுக்கு குருத்தோலை சாம்பலால் நெற்றியில் குறியிடுவார்.கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள சுமார் 280 அருட்பணியாளர்கள் 168 பங்கு ஆலயத்திலும்,183 கிளை பங்கு ஆலயத்திலும் திருப்பலி நிறைவேற்றி குருத்தோலை சாம்பலை பக்தர்கள் நெற்றியில் வைப்பர்.அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலயம்,சூசையப்பர் ஆலயம்,மாடத்தட்டு தூய செபஸ்தியார் ஆலயம்,தக்கலை புனித எலியாசியர் ஆலயம்,வீரப்புலி கிறிஸ்து அரசர் ஆலயம்,தடிக்காரன்கோணம் பனிமய அன்னை ஆலயம்,கன்னியாகுமரி தூய அலங்கார மாதா ஆலயம்,ஆரல்வாய்மொழி தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் இன்று(22ம் தேதி) சாம்பல் புதன் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !