சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து பக்தர்கள் வழிபாடு
ADDED :2549 days ago
ஈரோடு: சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள், மொட்டையடித்து வழிபட்டனர். ஈரோடு மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, சூரம்பட்டிவலசு சுயம்பு மஹா மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
நாளை (ஜன.,8ல்) தீர்த்த ஊர்வலம் நடக்கிறது. 9ல் பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு, தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், மஞ்சள், வேப்பிலை கலந்த புனித நீரை ஊற்றி வருகின்றனர். நேற்று (ஜன.,6ல்) விடுமுறை நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள், குழந்தைகளுக்கு மொட்டையடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனால் கோவில் வளாகம், பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதியது.