திருச்செங்கோட்டில், 63 நாயன்மார்களுக்கு பூச்சொரிதல் விழா
                              ADDED :2488 days ago 
                            
                          
                           திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், 63 நாயன்மார்களுக்கு பூச்சொரிதல் விழா கைலாசநாதர் கோவிலில் நடந்தது. கைலாசநாதர் ஆலயம் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில், சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 
பூக்களுடன் வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கைலாச நாதருக்கு பூ சொரிதல் செய்யப்பட்டது. விநாயகர், முருகன், கைலாசநாதர், சுகந்தகுந்தலாம்பிகை, ஆதிகேசவ பெருமாள் முன்செல்ல, 63 நாயன்மார்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா வந்தனர். யாக பூஜை, அபிஷேக நிகழ்ச்சிகளில் ஏரளமானவர்கள் கலந்துகொண்டனர்.