உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் அனுமன் ஜெயந்தி விழா ஆன்மிக சொற்பொழிவு

குமாரபாளையம் அனுமன் ஜெயந்தி விழா ஆன்மிக சொற்பொழிவு

குமாரபாளையம்: குமாரபாளையம், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பவானி குருபிரசாத்,ராமாயண காவியத்தில் சுந்தர காண்டம் குறித்து பேசினார்.

இவர் பேசுகையில், ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. சீதா தேவியை சந்தித்து வர செல்லுதல், சஞ்சீவி மலையை எடுத்து வருதல், ராமபிரானை தன் இதயத்தில் வைத்து பூஜித்தல் உள்ளிட்ட பல செயல்களை செய்யும் போது, ராம பக்தர்கள் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல படிப்பினை உண்டாக்கியது, என்றார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !