தெய்வ நம்பிக்கையுள்ள பெண் சபரிமலைக்கு செல்லவில்லை
கோவை:சிவானந்தா காலனியில், சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், சபரிமலையின் பாரம்பரியம் காக்க வேண்டி பொதுக்கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில், சென்னை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் துரை சங்கர் பேசியதாவது: சபரிமலை விவகாரம் முழுக்க முழுக்க, இந்து விரோத சக்திகளின் சதி.
சபரிமலையின் ஆச்சார அனுஷ்டானங்களையும், பாரம்பரியத்தை யும் கெடுக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள்.உண்மையான தெய்வ நம்பிக்கையுள்ள, எந்த பெண்ணும் இதுவரை சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்யவில்லை.
இந்து மதத்தில், பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பெண்களை தெய்வமாகவும்வணங்குகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.இதில், கோவை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள், கோவை ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடத்தின் சிவகிருஷ்ண மூர்த்திகள் சுவாமிகள், மங்கையர் மங்கலம் அறக்கட்டளையின் சாருமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.