உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பினராயி அரசின் கடும் கட்டுப்பாடு பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திலும் சிக்கல்

பினராயி அரசின் கடும் கட்டுப்பாடு பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திலும் சிக்கல்

சபரிமலை:சபரிமலையில் போலீசின் கடும் கட்டுப்பாடுகளால் நிலக்கல் முதல் பம்பை வரை உள்ள பகுதியில் பக்தர்கள் மகரஜோதி தரிசனம் நடத்த முடியாது.

சபரிமலையை போலீசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி யியை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்.  போலீசாரை கேட்காமல் தேவசம்போர்டும் எதுவும் செய்ய முடியாது. இதனால் நடப்பு ஆண்டில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

சன்னிதானத்தில் கூட்டம் இல்லை என்றாலும், தரிசனம் முடிந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட தேவசம்போர்டை போலீசார் கட்டாயப்படுத்துகின்றனர்.

இந்த கட்டுப்பாடுகளால் மகர ஜோதி தரிசனத்திலும் பக்தர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலக்கல்லில் இருந்து பம்பை வரும் வழியில் அட்டத்தோட்டில் ஜோதி தரிசனம் நடத்த முடியும்.

பம்பையில் ஹில்டாப், திருவேணியிலும் தரிசனம் செய்ய முடியும். ஆனால் நிலக்கல்- பம்பைக்கு அரசு பஸ்களில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவதால் அட்டத்தோட்டில் தரிசனம் செய்ய முடியாது.

ஹில்டாப், திருவேணியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பம்பையில் தேவசம்போர்டு விருந்தினர் மாளிகையின் பின்புறம் காட்டுப்பகுதியில் மட்டுமே குறைந்த எண்ணிக்கை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனால் பக்தர்கள் சன்னிதானத்தில் குவிய வாய்ப்பு உள்ளது. போலீசின் கட்டுப்பாடுகளை தளர்த்தி எல்லா இடங்களிலும் மகர ஜோதி தரிசனம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !