உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி: ஊட்டி கீழ் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா மற்றும் ஏழு ெஹத்தையம்மன்களுக்கு மாதாந்திர சிறப்பு பூஜை நடந்தது. விழாவை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, ஆனந்த மலை முருக பெருமானுக்கு அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏழு ெஹத்தை அம்மன்களுக்கு ஆராதனை மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜைகளை, பி. மணியட்டி மகேஷ் முன்னிலையில் நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை, 10:00 முதல், 12:00 மணி வரை, அத்திகல் போஜன் குழுவினரின் பஜனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், மேற்குநாடு சீமை முக்கியஸ்தர் போஜன், சின்னக்குன்னுார் ராஜூ உட்பட, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !