உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் அமெரிக்க பக்தர்கள்

பழநியில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் அமெரிக்க பக்தர்கள்

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி கோவிலில், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, அமெரிக்க பக்தர்கள், முருகனை வழிபட்டனர்.அமெரிக்காவைச் சேர்ந்த டாக்ல்ஸ்புருஷ் என்ற சுந்தரமூர்த்தி தலைமையில், 18 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகனின் அறுபடை வீடுகளை தரிசிக்க, தமிழகம் வந்துள்ளனர்.இவர்கள் நேற்று, திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலுக்கு, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். காவடி எடுத்து, வெளிப் பிரகாரத்தை வலம் வந்து, உச்சிக்கால பூஜையில், முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியில் வழிபட்டனர். சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஜெகநாதன் பாபு கூறுகையில், ”இவர்கள், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழாவில் பங்கேற்று வருகின்றனர். ”அறுபடை வீடுகளை தரிசித்து, மதுரை திருப்பரங்குன்றம் சென்று, கடைசியாக திருச்செந்துாரில் வழிபாட்டை முடிக்கின்றனர். நம் கலாசாரம் பிடித்து விட்டதால், சிலர் தமிழ் மொழியைக் கற்று வருகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !