கும்ப மேளாவை சீர்குலைக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை
ADDED :2492 days ago
அலகாபாத்: உத்திரபிரதேசத்தில் நடக்க உள்ள மகா கும்பமேளாவில் மிகப்பெரிய நாசவேலையை நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வருகிற 14-ம் தேதி மகா கும்பமேளா துவங்குகிறது. மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த வழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்நிலையில் கும்பமேளா நடக்கும் நாட்களில், மக்களோடு மக்களாக ஊடுருவி நாசவேலை செய்ய பாக்.பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து அலகாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வரும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுப்பதிப்பது என வட கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.