உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தி மணம் கமழ்ந்த பாவை

பக்தி மணம் கமழ்ந்த பாவை

 திருப்பூர்:திருப்பூரில் நடந்த பாவை விழாவில், 20 பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை, ராகத்துடன் பாடி அசத்தினர்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் பாவை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு விழா, விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று நடந்தது.இதில், மாவட்டத்திலிருந்து, 20 பள்ளிகளை சேர்ந்த, 400 பேர் பங்கேற்றனர். திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர் பிரிவுக்கு, மார்கழியும் ஆண்டாள் வழிபாடும் மற்றும் சிவன் மகிமை என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது.ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பிரிவினர், திருப்பாவை மற்றும் திருவெம்பாவையின், தலா, மூன்று பாடல்களுக்கு விளக்கமும், உரையும் எழுதினர். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான பிரிவினருக்கு, நாடும் வீடும் நலம்பெறும் மார்கழி வழிபாடு மற்றும் மார்கழியும் மாதொருபாகனும் என்ற தலைப்பில், கட்டுரை போட்டி நடந்தது.மொத்தம், 36 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் பரிசாக, 3 ஆயிரம் ரூபாய், 2வது பரிசாக, 2 ஆயிரம், 3வது பரிசாக, ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.மேலும், சிறப்பாக பாடிய மாணவ, மாணவியருக்கு, ஆறுதல் பரிசும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, உதவி கமிஷனர் ஹர்சினி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் வரவேற்றார். இணை கமிஷனர் ராஜமாணிக்கம், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !