உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் திருவாசக முற்றோதல்

கண்டாச்சிபுரத்தில் திருவாசக முற்றோதல்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவாசக முற்றோதல் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் திருவாசக முற்றோதல் குழுவினர் சார்பாக,மாதந்தோறும் திருவாசக முற்றோதல் நடைபெற்று வருகிறது,நேற்று (ஜன., 13ல்) நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சிக்கு,ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார்.

ஓதுவார்கள் சந்நியாசி, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காலை 8 மணிமுதல் பிற்பகல் வரை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில் ஆறுமுகம்,கணேசன்,கல்யாணசுந்தரம் உட்பட ஓதுவார்கள் பலர் கலந்துகொண்டு தேவார,திருவாசகப் பதிகங்களைப் பாடினர்.பின்னர் இறைவழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை திருவாசக முற்றோதல் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !