உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.உலக நன்மை வேண்டி தமிழ்ச்சங்கம் மற்றும் வள்ளலார் மரம் நடுவோர் சங்கம் சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்ச்சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார்.திருவாசகம் முற்றோதல், பல்வேறு தலைப்புகளில் இசையுடன் பாடப்பட்டு, மகாதீபாரதனை நடந்தது. இதில் சங்க துணை செயலாளர் சிவநேசன், ஜெயராமன், மரம் நடுவோர் சங்க செயலாளர் செல்வராஜ், தெய்வானை், சுப்பிரமணி மற்றும் சிவனடியார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !