பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூரில், ராதா மாதவ திருக்கல்யாணம்
ADDED :2460 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர், ராமர் பஜனை மடத்தில், 47ம் ஆண்டு, ராதா மாதவ திருக்கல்யாண உற்சவம், நேற்று (ஜன., 13ல்) நடந்தது. அதில், உலக நன்மை, மழை பெய்ய வேண்டி, திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதையொட்டி, பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். முன்னதாக, ஏத்தாப்பூர் ஸ்ரீமாது பாகவதர், உடையாளூர் பலராம பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.