கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலம் துவக்கம்!
ADDED :5013 days ago
சென்னை: கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்கலாம் நேற்று துவங்கியது. சாம்பல் புதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள சர்ச்சுகளில் வழிப்பட்ட கிறிஸ்துவர்களின் நெற்றியில் சாம்பலை பூசி, நற்செய்தியை பாதிரியார் வழங்கினார். இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டு, அவர் மரித்த மூன்றாம் நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, புனித வாரம் துவங்குகிறது. புனித வெள்ளியன்று இயேசுவை சிலுவையில் அடித்த பாடுகளை நினைவு கூறும் வகையில், துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் அடையாளமாக சாம்பல் புதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் வழிப்பட்ட கிறிஸ்துவ மக்களின் நெற்றியில் சாம்பலை பூசி பாதிரியார்கள் நற்செய்தி வழங்கினர்.