உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

நத்தம் :நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழாவில், வழுக்கு மரம் ஏறியும், பூக்குழி இறங்கியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இங்கு பிப்.,7 ல், கொடியேற்றப்பட்டது. கரந்தன்மலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தனர். பிற்பகல் 2 முதல் 4 மணி வரை, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பின், பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அம்மன் குளத்தில் கம்பம் விடப்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. அறநிலைய துறை இணை கமிஷனர் சுதர்சன், செயல் அலுவலர் செந்தில்குமார், பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சின்னையா, நடராசு, சுப்புராசு ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !