மண்டைக்காடு பகவதி கோயில் மாசிக்கொடை விழா: மார்ச் 4ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடைவிழாவில் ஹைந்தவ சேவாசங்கம் சார்பில் சமயமாநாடு மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிபெரும் கொடைவிழா வரும் மார்ச் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள்விழாவான மார்ச் நான்காம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடியேற்றம், 8.30மணி ஹைந்தவசேவாசங்க மாநாட்டுப்பந்தலில் கொடியேற்றம், 9மணி சமயமாநாடு துவக்கவிழா, மற்றும் விழாமலர் வெளியீட்டுவிழா, மதியம் 12மணி பஜனை, மாலை 6மணி ராஜராஜேஸ்வரிபூஜை மற்றும் 3006 திருவிளக்கு பூஜை, இரவு 8மணி பரத நாட்டியம் உள்ளிட்டவை நடக்கிறது. இரண்டாம்நாள்விழாவான மார்ச் 5ம் தேதி திங்கள்கிழமை காலை 7மணி அருட்பெரும்ஜோதி அகவல்பாராயணம், 9மணி திருவாசகம் முற்றோதல், 12.30மணி சமயமாநாடு, மாலை 3மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 5மணி பஜனை, 7மணி சமயமாநாடு, இரவு 11மணி கதகளி உள்ளிட்டவை நடக்கிறது. மூன்Ùம்நாள்விழாவான மார்ச் 6ம்தேதி செவ்வாய்கிழமை காலை 8மணி பஜனை, 10மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 12மணி சமயமாநாடு, மாலை 2.30மணி சிந்தனைசொல்லரங்கம், 6.30மணி பக்தி அலைநிகழ்ச்சி, இரவு 8மணி சமயமாநாடு, 11மணி பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடக்கிறது. நான்காம் நாள்விழாவான மார்ச் 7ம்தேதி புதன்கிழமை காலை 8மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 10மணி பஜனை, 12மணி பக்திஇன்னிசை, 2.30 சமயமாநாடு, மாலை 5மணி கர்நாடக சங்கீத கசேரி, இரவு 7.30மணி சமயமாநாடு, 10.30மணிக்கு நாடகம் உள்ளிட்டவை நடக்கிறது. 5ம்நாள் விழாவான மார்ச் 8ம்தேதி வியாழக்கிழமை காலை 8மணி பஜனை, 10மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 12மணி சமயமாநாடு, மாலை 3.30 பக்தி இன்னிசை, 5மணி கர்நாடக இசை, இரவு 7மணி சமயமாநாடு, 10.30மணி இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 6ம்நாள்விழாவான மார்ச் 9ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 8மணி பஜனை, 10மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, ஒருமணி இன்னிசை, மாலை 3மணி சிந்தனை சொல்லரங்கம், 5.30 பக்திபாமாலை, இரவு 8மணி சமயமாநாடு, 11.30மணி நாட்டுப்புறபாடல்கள் உள்ளிட்டவை நடக்கிறது. 7ம்நாள்விழாவான மார்ச் 10ம்தேதி சனிக்கிழமை காலை 7மணிபஜைனை, 10மணி பேச்சுப்போட்டி, மாலை 3மணி சங்க வருடாந்திரகூட்டம், 4மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 5மணி மாதர்மாநாடு, 8.30மணி சமயமாநாடு. இரவு 11.30மணி நாடகம் உள்ளிட்டவை நடக்கிறது. 8ம்நாள்விழாவான மார்ச் 11ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி ராமாயணம் தொடர்விளக்க உரை, 10மணி பண்பாட்டுப்போட்டிகள், மாலை 3மணி பக்தி இன்னிசை, 4.30மணி சத்சங்கம், 6.30மணி அகிலதிரட்டுவிளக்க உரை, இரவு 8மணி சமயமாநாடு, இரவு 12மணி மெல்லிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9ம்நாள்விழாவான மார்ச் 12ம்தேதி திங்கள்கிழமை காலை ராமாயணம் தொடர்விளக்க உரை, 9மணி பஜனை, 10.30மணி சமயமாநாடு, 2.30மணி பஜனை, மாலை 6மணி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இரவு 11மணி பட்டிமன்றம் உள்ளிட்டவை நடக்கிறது. 10நாள்விழாவான மார்ச்13ம் தேதி செவ்வாய்கிழமை காலை 8மணி ராமாயணம் நிறைவுரை, 9மணி பட்டிமன்றம், 11.30 சொற்பொழிவு, மதியம் ஒருமணி சிந்தனைசொல்லரங்கம்,மாலை 3மணி அரசுப்பொதுத்தேர்வுகளில் அதிகமதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுவழங்குதல், இரவு 7மணி சமயமாநாடு, 10மண்இ இன்னிசை, நள்ளிரவு 12மணி ஒடுக்குபூஜை உள்ளிட்டவை நடக்கிறது. சமயமாநாடு நிகழ்ச்சிகளை ஹைந்தவசேவாசங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.