பல்லடம் மார்கழி உற்சவம் நிறைவு பஜனை வழிபாடு
ADDED :2459 days ago
பல்லடம்:ஸ்ரீசத்ய சாயிபாபா சேவா சமிதியின் சார்பில், மார்கழி உற்சவ விழா, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் நடந்தது.
சுந்தரபாண்டியன் பேசியதாவது: கடவுள் குறித்து, கணக்கில்லாத இலக்கியங்களை உருவாக்கியது மொழி; சைவம் வைணவத்தை வளர்த்ததும் தமிழ் மொழி தான்.
உணர்வுகளோடு கலந்தது தமிழ் மொழி. திருவாசகத்துக்கு உருகாத மனிதர்களே இல்லை என்பது போல், கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த ஜி.யு.போப், தமிழ் இலக்கியத்தால் கவரப்பட்டார்.
ஆங்கில மோகத்தால், அப்பா, அம்மா என அழைப்பதை தவிர்த்து, மம்மி, டாடி என, குழந்தைகள் அழைக்கின்றன. இதை தவிர்த்து அன்னை மொழியில் அன்னையை அழைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ஸ்ரீசத்ய சாயிபாபா சேவா சமிதியின் சார்பில், பஜனை நடந்தது. பக்தர்களுக்கு, சாயிபாபா சேவா சமிதியின் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.