விருத்தாசலத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2460 days ago
விருத்தாசலம்:மாட்டுப் பொங்கலையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (ஜன., 16ல்)காலை 8:00 மணியளவில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், கரும்புத் துண்டுகள், வாழைப்பழம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை
நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.