சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பொங்கல் சிறப்பு பூஜை
ADDED :2551 days ago
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பொங்கலை முன்னிட்டு நர்த்தன விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜன.,15ல்) காலை 5:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரர், சுப்ரமணியர் ஆகிய மூலவர் மற்றும் நர்த்தன விநாயகர் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 7:00 மணிக்கு நர்த்தன விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த நர்த்தன விநாயகர் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமியை வழிபட்டனர்.
அதேபோல் சி.என்.பாளையம் ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவில், நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில்களிலும் பொங்கல் பண்டிகை சிறப்பு வழிபாடு நடந்தது.