நெல்லிக்குப்பத்தில் அனைத்து மதத்தினர் பங்கேற்ற பொங்கல்
ADDED :2551 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் காமராஜர் தெருவில் வாசம் டிரஸ்ட், வாசம் மகளிர் சுயஉதவிக் குழுவினர் சார்பில் நடந்த விழாவிற்கு, அமைப்பாளர் சுப்ரமணி தலைமை தாங்கினார். இயக்குனர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.நகராட்சி சுய உதவிக் குழுக்களின் அமைப்பாளர் உமா, குழு தலைவி மதினாபேகம், சந்திரா, கவுரி, முன்னாள் கவுன்சிலர் அப்துல் ரஹீம், ஜமா அத் தலைவர் பஷீர், வர்த்தக சங்க இணைச் செயலர் சுரேஷ், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.