உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வரும் 21ல் தேரோட்டம்

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வரும் 21ல் தேரோட்டம்

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், வரும், 21ல், தைப்பூச தேர் திருவிழா நடக்கிறது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில் உள்ளது.

இங்கு, வரும், 21ல் தைப்பூச தேர் திருவிழா நடக்கிறது. நாளை (ஜன., 18ல்)மதியம், 1:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், 18, 19 தேதிகளில், மதியம், 1:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்; 20 மதியம், 1:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், இரவு, 12:00 மணிக்கு திருக்கல்யாண வைபோகம், சுவாமி திருத்தேருக்கு புறப்பாடு. வரும், 21 காலை, 6:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, மாலை, 3:00 மணிக்கு
திருத்தேர் வடம் பிடிப்பு; 24ல் வசந்த விழாவுடன் விழா நிறைவடைகிறது. திருவிழா சமயத்தில், ஒவ்வொரு நாளும் இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட மின் அலங்காரத்தில், சுவாமி
வீதி உலா நடக்கும். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !