வீரபாண்டியில் பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
வீரபாண்டி: தமிழர் திருநாளான தைப்பொங்கல் முதல், தைப்பூசம் வரை, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு, பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய, மாநிலம் முழுவதும்
இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்கின்றனர்.
அதன்படி, சேலம், பூலாவரியிலிருந்து, திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை குழுவினர், 47ம் ஆண்டாக பயணத்தை, நேற்று (ஜன., 16ல்)தொடங்கினர். அதேபோல், ஆட்டையாம் பட்டியிருந்து, சுற்றுவட்டார பக்தர்கள், வரும், 21ல் நடக்கும் தைப்பூச திருவிழாவையொட்டி,
பழநிக்கு பாதயாத்திரை பயணத்தை, நேற்று (ஜன., 16ல்) தொடங்கினர்.
பழநிக்கு பாதயாத்திரை சென்று, முருகனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி, வெற்றிகள் குவியும் என்ற நம்பிக்கையால், ஆண்டுதோறும் பாதயாத்திரை செல்வதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.
* சங்ககிரி, பவானி சாலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நேற்று முன்தினம், (ஜன., 15ல்) பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. அதன்மூலம், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயனடைந்தனர்.