ராஜ அலங்காரத்தில் காளிப்பட்டி கந்தசாமி
ADDED :2462 days ago
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தை கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று (ஜன., 16ல்) காலை, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின், வள்ளி, தெய்வானையுடன், உற்சவர் கந்தசாமிக்கு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, விசேஷ பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். மாலை, வள்ளி, தெய்வானை, கந்தசாமியை, மயில் வாகனத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலை வலம்வரச் செய்தனர். அதேபோல், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.