உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூசவிழா கோலாகலம்: வெளிநாட்டு பயணிகள் வியப்பு

பழநி தைப்பூசவிழா கோலாகலம்: வெளிநாட்டு பயணிகள் வியப்பு

பழநி:- தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அலகு குத்திய பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள், பால்குடங்களுடன் குவிகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பழநி தைப்பூசவிழா ஜன.,15ல் முதல் 24 வரை நடக்கிறது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மதுரை, சிவகங்கை, நாமக்கல், சேலம் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டபாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.  இதேபோல அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். நேற்று சென்னைபக்தர் ஒருவர் அலகு குத்தியும், திருப்பூர், மதுரை பக்தர்கள் மயில், பால், காவடிகள் எடுத்தும் கிரிவீதியை வலம் வந்தனர். மலைக்கோயிலில்திரண்ட பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரிட்டன் பயணிகள் வியப்பு:  தைப்பூச விழாவை முன்னிட்டு, இங்கிலாந்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பேம், சந்தியா ஆகியோர் பாதவிநாயகர் கோயில் அருகே அலகு குத்திவந்த பக்தர்களை வியப்புடன் பார்த்து புகைப்படம் எடுத்து தள்ளினர்.

அவர்கள் கூறுகையில், இரண்டாவது முறையாக பழநிக்கு சுற்றுலா வந்துள்ளோம். ஒருவாரம் தங்கி விழாவை கண்டு ரசிப்போம். தைப்பூச விழா எக்ஸ்சலன்ட் பங்ஷன் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !