கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில் புஷ்பாஞ்சலி விழா
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில், நாளை புஷ்பாஞ்சலி விழா துவங்குகிறது. திருமலை திருப்பதி ததியாராதனை குழு சார்பில், சேலம் கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில், நாளை புஷ்பாஞ்சலி, வேதபிரபந்த சேவை, வைஷ்ணவ பகவத் ஆராதனை மற்றும் ததியாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம, சிறப்பு அலங்காரம், தீபராதனை மற்றும் பூஜை நடக்கிறது. புஷ்பாஞ்சலி விழாவை முன்னிட்டு, வரும் 25ம் தேதி நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் உள் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு பூ, வன சூழலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அங்கு, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, வைஷ்ணவ தாசர்களுக்கு மஹா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலவலர் ராஜா, நிர்வாக அதிகாரி ஜெகநாதன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.