உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

சக்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் நன்னீராட்டு விழா

சேந்தமங்கலம்:அக்கியம்பட்டி சக்தி விநாயகர், மகா மாரியம்மன் கோவில்களில், பிப்ரவரி 26ம் தேதி, திருக்குட நன்னீராட்டு விழா கோலாகலமாக நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியில், சக்தி விநாயகர், மகா மாரியம்மன், நககோள் நாயகர்கள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, சில ஆண்டுளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிந்த நிலையில், ஃபிப்ரவரி 26ம் தேதி, கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நாளை (ஃபிப்., 24) மாலை 7 மணிக்கு, திருவிளக்கு வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் வேள்விச் சாலைக்கு புறப்படுதல், இரவு 9.30 மணிக்கு முதற்கால வேள்வி, திருநீற்றுக்காப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிப்ரவரி 25ம் தேதி காலை 7 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, காலை 10 மணிக்கு விமானக் கலசங்கள் நிறுவுதல், இரவு 7.30 மணிக்கு மூன்றாம் காலவேள்வி, இரவு 11 மணிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பிப்ரவரி 26ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, நான்காம் கால வேள்வி, திருக்குடங்கள் கோவிலை சுற்றி வருதல், காலை 7 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, பிப்ரவரி 25 மாலை முதல் 26ம் தேதி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !