கோவிந்தவாடி பச்சையம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2494 days ago
கோவிந்தவாடி: காணும் பொங்கல் விழாவை ஒட்டி, கோவிந்தவாடி பச்சையம்மன் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், மன்னார் சுவாமி சமேத, பச்சையம்மன் திருக்கோவில் உள்ளது. காணும் பொங்கலையொட்டி, நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இந்த உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது.இரவு, உற்சவர் மன்னார்சாமிக்கும், பச்சையம்மனுக்கும், திருக்கல்யான வைபவம் நடந்தது.இதில், பங்கேற்றிருந்த கிராம மக்கள், மணமக்களை வாழ்த்தி, வணங்கினர்.