சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
ADDED :2556 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : சபரிமலை ஆன்மிக இடம்; அது புரட்சிக்கான இடமல்ல, என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர்ஜி கூறினார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நேற்று தரிசனம் செய்த பின், அவர் கூறியதாவது: சபரிமலையின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். அதை, பெண்கள் கடைப்பிடிக்கவேண்டும். அது ஒரு ஆன்மிக இடம்; புரட்சிக்கான இடமல்ல. உண்மையான பக்தி கொண்ட பெண்கள், அங்கு செல்ல மாட்டார்கள். பக்தி இல்லாதவர்கள், அதிகாரத்தை சாதிக்க, அங்கு செல்கின்றனர். இது, அதிகமானோரின் மனதை வேதனைப்பட வைக்கிறது. அப்பீல் விசாரணையில், நிச்சயமாக உச்ச நீதிமன்றம், இதை கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.