உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றம்

தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றம்

தர்மபுரி: தைப்பூசத்தையொட்டி, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, கொடியேற்றம் நடந்தது. இதில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, புற்றுமண் எடுத்தல் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் ஆட்டுக்கிடா வாகனத்தில் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, புலி வாகன உற்சவம், நாளை காலை பூத வாகன உற்சவம், நாளை மறுநாள் நாக வாகன உற்சவம் நடக்கிறது. வரும் ஜன., 21ல், காலை, 8:00 மணிக்கு, பால்குட ஊர்வலம், இரவு, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம், 12:00 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. வரும், 22ல், விநாயகர் தேரோட்டம், 23ல், மகளிர் மட்டும் பங்கேற்கும், தேர்த்திருவிழா நடக்கிறது. 25ல், கொடியிறக்கம், பூப்பல்லக்கு உற்சவம், 26ல், சயன உற்சவம் நடக்கிறது. இதேபோல், இண்டூர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணி சுவாமி கோவில் உட்பட, பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று கொடியேற்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !