சவுண்டம்மன் கோவில் விழா: கத்தி போட்டு வீரகுமாரர்கள் ஊர்வலம்
ADDED :2494 days ago
அந்தியூர்: அந்தியூர் சவுண்டம்மன் கோவில் விழாவில், 500க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள், கத்தி போட்டு ஊர்வலம் சென்றனர். அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் (சவுண்டம்மன்) கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா, தை மாதம், 1ல் தொடங்கியது. நான்கு நாட்கள் நடந்த விழாவின் ஒரு பகுதியாக, கத்திபோடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள், உடலில் கத்தி போட்டபடி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். நான்கு நாள் நடந்த விழா, நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் அந்தியூர் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.