அம்பகரத்தூர் அருகே உமாபசுபதீஸ்வரர் கோசாலையில் பொங்கல் சிறப்பு பூஜைகள்
ADDED :2493 days ago
காரைக்கால்: அம்பகரத்தூர் அருகே உமாபசுபதீஸ்வரர் கோசாலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோபூஜை நடைபெற்றது.
காரைக்கால் அம்பகரத்தூர் அடுத்த கந்தன்குடியில் உள்ள உமாபசுபதீஸ்வரர் கோசாலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோபூஜை நடைபெற்றது.முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை நடந்தது.சிவாச்சாரியார் ராஜாசுவாமிநாதர் தலைமையில் பசுக்களுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.மங்களவாத்தியம் முழங்க நான்கு வீதிகளில் பசுக்கள் வலம் வந்து, கோசலையை வந்தடைந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.