உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

விழுப்புரம்:திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு, திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நந்திகேசுவரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணியளவில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:30 மணியளவில் பல்வேறு காய்கறிகள் மாலையாக அணிவிக்கப்பட்டது. பழ வகைகள் மற்றும் இனிப்பு, காரம் உள்ளிட்டவை வைத்து நந்திகேஸ்வரருக்கு படையல் செய்து, தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கன்யா மற்றும் அருளாளர் சுந்தரர் அருட்சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !