/
கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலை: வரும் 20ல் வேல் பிரதிஷ்டை
பெத்தநாயக்கன்பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலை: வரும் 20ல் வேல் பிரதிஷ்டை
ADDED :2492 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம்,புத்திரகவுண்டன் பாளையம், முத்து நகரில், உலகில், மிக உயரமான, 126 அடி உயர முத்துமலை முருகன் சிலை வடிவமைக்கும் பணியில், திருவாரூர் சிற்பி தியாகராஜன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வரும், 20 காலை, 8:00 மணிக்கு, பஸ் ஸ்டாப் அருகேவுள்ள விநாயகர் கோவிலிலிருந்து, 108 பெண்கள், பால் குடங்களை சுமந்து, யானை, குதிரை, பசுவுடன், மேளதாளத்துடன் ஊர்வலம் நடக்கும். காலை, 9:30 மணிக்கு கோ பூஜை, மதியம், 12:00 மணிக்கு வேல் பிரதிஷ்டை, 1:00 மணிக்கு அன்னதானம், 3:00 மணிக்குமேல், சின்னத்திரை நடிகர்கள் பங்கேற்கும் சிறப்பு கலை நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு, இலவச அர்ச்சனை செய்துகொள்ள விரும்பினால், 97505 23523, 86439 00901 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.