குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா
ADDED :2541 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் உள்ள அரங்கநாதர், ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவ விழா சிறப்புடன் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து ஊஞ்சல் சேவை, சீர் வரிசை வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாமகிரிபேட்டை ரவிச்சந்திரன் சாஸ்திரி மற்றும் குழுவினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். ஐயப்ப சேவா சங்கத்தார், மஞ்சமாதா மாதர் சங்கத்தார் மற்றும் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.