வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருஊடல் உற்சவம்
ADDED :2492 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் பொங்கலையொட்டி நந்தீஸ்வரருக்கு திருஊடல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சென்னை, பெங்களூரு, ஊட்டி ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 1000 கிலோ கேரட், பீட்ரூட், தக்காளி, வெண்டை, முள்ளங்கி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், போன்ற காய்கறிகள் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாச்சி, சாத்துக்குடி, மாதுளம் போன்ற பழ வகைகளாலும்; வண்ண மலர்களாலும், வாழைமரம், பன்னீர் கரும்பு, மாவிலை தோரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மாலை 5:30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.