உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் மீட்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்கள் மீட்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களுக்கு சொந்தமான 94 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிர்வாகம் மீட்டது. மதுரை நகரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சித்த வைத்திய சாலை கட்டடம், 24.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேரடி மண்டபக்கடை மீட்கப்பட்டது. அதேபோல் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்லுார் திருவாப்புடையார் கோயில் மண்டபம், 38.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி குடியிருப்பு கட்டடம், 3.53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எழுகடல் வணிக வளாகம் கடை மீட்கப்பட்டது.

மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் 4.32 லட்சம் மற்றும் 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ளஆவின் பூத், டான் டீ பெட்டி அகற்றப்பட்டு கோயில் இடம் மீட்கப்பட்டது. பொன்மேனியில் 51 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.4 ஏக்கர் நிலத்தை கோயில் பணியாளர்கள் சிலர் அபகரித்தனர். அவர்களிடம் இருந்தும் மீட்கப்பட்டது. விருதுநகர் எரிச்சநத்தம் 7 ஏக்கர் புஞ்சை நிலம், சிவகங்கை திருப்புவனம், திருச்சி மணப்பாறை 53.35 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மொத்தம் 93 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபகரிப்பாளர்களிடம் இருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !