உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் கண்ணப்ப நாயனார் குருபூஜை

கைலாசநாதர் கோவிலில் கண்ணப்ப நாயனார் குருபூஜை

நாமக்கல்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், கண்ணப்ப நாயனார் குருபூஜை விமரிசையாக நடந்தது. ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், 63 நாயன்மார்கள் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை மாதம், கண்ணப்பநாயனார் குரு பூஜை கொண்டாப்பட்டும் நேற்று நடந்த பூஜையில், கண்ணப்ப நாயனாருக்கும், உற்சவர் சுவாமிக்கும் சிறப்பு அபி ஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவர் கண்ணப்ப நாயனார், சிறப்பு அலங்காரத்தில், கைலாய வாத்தியம் முழங்க, திருக்கோவில் உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !