உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி அருகே கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

தேனி அருகே கருப்பணசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

தேனி: தேனி அருகே பூமலைக்குண்டு கிராமத்தில் அய்யனார், ஸப்த கன்னிமார்கள், கருப்பண சுவாமி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜன.17 மாலை 4.30 மணியளவில் தீர்த்தப் புறப்பாடு நடந்தது. இதில் தேவராட்டம், சிலம்பாட்டம் இடம் பெற்றது.

மாலை 5:00 மணிக்கு முதல் காலயாக பூஜை ,மங்கள வாத்தியம், விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், பஞ்சகவ்யபூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பூமிகுமார மூர்த்தி ஹோமம், கும்ப அலங்காரம், கலாகர்ஷ பூஜை என பல்வேறு பூஜை நடத்தப்பட்டது. நேற்று 18ல், காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி, 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பொங்கல் வைத்தல் நிகழ்வுடன், இன்னிசை கச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி, விழாக்குழு நிர்வாகிகள்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !