விருத்தாசலத்தில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2711 days ago
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று (ஜன., 18ல்) காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:45 மணிக்கு மேல் பால், தயிர், சந்தனம், கரும்புச்சாறு, எலுமிச்சை, தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான பொருட் களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.