உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் கோவிலில் மதுபாட்டில்களுடன் கருப்பசாமிக்கு படையல்

குச்சனூர் கோவிலில் மதுபாட்டில்களுடன் கருப்பசாமிக்கு படையல்

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இங்குள்ள சோணை கருப்பசாமிக்கு பக்தர்கள் வழங்கிய நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் படையல் செய்து பிரார்த்தனை செய்தனர்.


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருத்திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இங்குள்ள சோனை கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள், 49 ஆடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட - கோழிகள் படையலாக வைத்து வழிபட்டனர். பின்னர் ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் கருப்பசாமி நகர் வலம் வந்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !