பாகூர் மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2491 days ago
பாகூர்: பாகூர் மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று (ஜன., 18ல்)நடந்தது.பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரதோஷ தினமான நேற்று (ஜன., 18ல்) காலை, மூலநாதர், வேதாம்பிகை, பாலவிநாயகர், முருகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் பிரதோஷ நாயகரான நந்தி பகவானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.