உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் 31ல் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருவள்ளூர் 31ல் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், 31ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.

நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.தை அமாவாசை அன்று, சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால், தை பிரம்மோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 31ம் தேதி, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்., ௯ம் தேதியுடன் நிறைவடைகிறது. தினமும், காலை, மாலை, இரு வேளையிலும், பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !