திருத்தணி கோவிலில் 21ல் தைப்பூச விழா
ADDED :2490 days ago
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 21ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகத கல், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இரவு, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் வீதியுலா வருவார்.தைப்பூசத்தையொட்டி, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் மற்றும் உடலில் அலகு குத்தி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.
அதே போல், தைப்பூசத்தையொட்டி, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் உள்ள வள்ளலார் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் ஏழு திரை விலகல் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.