ஆற்று திருவிழா: பேரங்கியூரில் தீர்த்தவாரி கோலாகலம்
ADDED :2558 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று தீர்த்தவாரி கோலகலமாக நடந்தது. பரிக்கல் லட்சுமிநரசிம்மர், ஆலங்குப்பம் பாண்டுரங்கன், அங்காளம்மன், பேரங்கியூர் கோதண்ட ராமர், ஆ.நத்தம் வைகுண்டவாசப் பெருமாள், மேலமங்கலம் ஆதிகேசவப்பெருமாள் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து சுவாமிகள் ஆற்றிற்கு கொண்டு வரப்பட்டன. மதியம் வரிசையாக சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பின், அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவில் காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிச்சென்றனர்.