உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா

பாகூர் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா

 பாகூர்: சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா (நதி தீர்த்தவாரி) நடந்தது. பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில், பொங்கல் பண்டிகையின் 5வது  நாளன்று ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆற்றுத் திருவிழா நேற்று நடந்தது.இதில், பாகூர், சேலியமேடு, அரங்கனுார், நிர்ணயப்பட்டு, குருவிநத்தம்,  இருளஞ்சந்தை, குடியிருப்புபாளையம்,மேல்அழிஞ்சிப்பட்டு, கரைமேடு, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளினர்.விழாவில், ஆயிரக்கணக்கான பொது மக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !